ஈரான் ரோந்து படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரித்த அமெரிக்க கடற்படை!

248

ஈரான் நாட்டின் ரோந்துப் படகின் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் இயந்திர துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் ஓர்முசு நீரிணை பகுதி வழியாக அமெரிக்க போர்கப்பல் சென்றது.

அப்போது அமெரிக்க போர்க்கப்பல் மீது ஈரான் நாட்டின் கப்பற்படையை சேர்ந்த கப்பல்கள் மோதுவது போல் வந்துள்ளது. இந்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை மிக ஆபத்தானதாகவும், தொழில்முறை பாதுகாப்பை மீறிய அச்சுறுத்தலாகவும் கருதுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் சென்று கொண்டிருந்த ஈரான் நாட்டின் அதிவிரைவு அதிரடிப்படை ரோந்துப் படகின் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

அந்த கப்பலில் இருந்த வீரர்கள் அதிநவீன இயந்திர துப்பாக்கிகளால் ஈரான் ரோந்து படகு மீது தாக்குதல் நடத்தி எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

625.500.560.350.160.300.053.800.748.160.70 (8)

SHARE