கொழும்பு துறைமுகத்தில் சற்றுமுன் பாரிய தீவிபத்து.

276

கொழும்பு துறைமுகத்தில் சற்றுமுன்னர் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள குவித்து வைக்கப்பட்டுள்ள இறப்பர் தொகை ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீவிபத்தினால் குறித்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துறைமுகத்தில் கொள்கலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீவிபத்து பரவியுள்ள இடத்தை அண்மித்த பகுதிகளில் இருந்த கொள்கலன்கள் சேதமடைந்துள்ளதாகவும், உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துறைமுக தீயணைப்புப் பிரிவினர் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகவும் அறியமுடிகின்றது.colombo_ harbar02

colombo_ harbar01

colombo_ harbar

SHARE