அட்டனில் பிரதமர் ரணில் உரை

260

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் விட மூவின மக்களும் ஒற்றுமையாக வாழம் ஒரே மாவட்டம் நுவரெலியா மாவட்டம். இங்கு கல்வித்துறையையும், பெருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

கடந்த 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அட்டன் நகரில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாசவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டன் விஜித்தா மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உறையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்து உரையாற்றுகையில் நாம் ஆட்சிக்கு வந்தப்பின் முதல் வருடம் காலப்பகுதியில் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டோம். இரண்டாம் வருடம் முதல் அபிவிருத்தியை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.

நுவரெலியா மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் சமாதான மாவட்டம். இங்கு கல்வி, பொருளாதார, அடிப்படை வசதிகள் பிரச்சினைகள் உள்ளது அவற்றைத் தீர்ப்பதற்காகவே திகாம்பரத்திற்கு மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சையும், கிராமத்தை அபிவிருத்தி செய்ய பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சை நவீனுக்கும், கல்வியை மேம்படுத்த ராதாகிருஸ்னனுக்கும் வழங்கினேன். மலையகத்தில் பிரதான நகரங்களான நுவரெலியா, அட்டன், மஸ்கெலியா நகரங்களை அபிவிருத்தி செய்யவுள்ளோம்.

நாட்டையும் ஆட்சியையும் பாதுகாக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் ஐக்கிய தேசியக் கட்சியை ஸ்திரப்படுத்தும் அங்கத்தவர் இணைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிற்துறையை மேம்படுத்தவே கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கினோம். அவர்களில் சிலர் இலாபம் மட்டுமே நோக்காகக்கொண்டு செயற்படுகின்றனர். மாறாகத் தொழிலாளர்களின் அபிவிருத்தியில் அக்கறை செலுத்துவதில்லை. ஆகவே எதிர்காலத்தில் சகல தொழிற்சங்கங்கள் மற்றும் கம்பனிகளுக்கு இடையில் புதிய நடைமுறையொன்றைக் கொண்டுவரவுள்ளேன். மேலும் தொழில்நுட்பத் தொழில் துறையை மேம்படுத்த கணனிப் பயிற்சியை விரிவாக்கவுள்ளேன். தோட்ட மக்களுக்கு வீடுகள் மட்டும் வழங்கிவிட்டால் போதாது. காணி உரிமையும், பொருளாதார, கல்வியிலும் உயர்வை ஏற்படுத்த வேண்டும். முன்னோக்கிச்செல்ல விரும்புபவர்களுடனே நாம் இணைந்துள்ளோம். ஆகவே நாட்டை முன்னோக்கிக்கொண்டுசெல்ல எம்மால் முடியும் அதற்கு உங்களின் ஒத்துழைப்புவேண்டும் என்றார்.

நிகழ்வில் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்னன், பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச, வடிவேலு சுரேஸ், எம்.திலகராஜ், மாகாணசபை உறுப்பினர்கள், அட்டன் நகரசபை முன்னால் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

நோட்டன் பிரீட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed (1)

unnamed (2)

SHARE