இரவில் வீட்டைவிட்டு வெளியில் வந்தால் 29 ஆயிரம் ரூபாய் அபராதம்-கனடா

266

download

கனடாவில் அல்பேர்ட்டா மாகாணத்தில் இரவு நேரத்தில் சிறுவர், சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவர்களது பெற்றோருக்கு ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அல்பேர்ட்டா மாகாண Bruderheim என்ற நகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த நகரில் கடந்த சில நாட்களாக குடியிருப்பினுள் புகுந்து கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதன்காரணமாக பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்த நகரத்தின் மேயரான Karl Hauch ஒரு அதிரடி உத்தரவை பிறபித்துள்ளார்.

அதில், 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையினை மீறி யாராவது வீட்டை விட்டு வெளியே வந்தால், அவர்களினது பெற்றோருக்கு முதல் முறையாக 100 டொலரும், இரண்டாவது முறையாக இதே தவறினை செய்தால் 200 டொலரும் இலங்கை மதிப்பில் 29ஆயிரத்து127 ரூபா அபராதம் விதிக்கப்படும் என Karl Hauch உத்தரவிட்டுள்ளார்.

குறித்த உத்தரவு சிறுவர் சிறுமிகளின் பாதுகாப்பிற்காக பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தடை எப்போது நீக்கப்படும் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE