நடிகர் அருண் விஜய் தலைமறைவு!

237

NTLRG_20160827100754173938

சென்னையில் குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டி பொலிஸ் வாகனம் மீது விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண்விஜய் பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாகியுள்ளார்.

நடிகர் அருண் விஜய் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகை ராதிகாவின் மகள், கிரிக்கெட் வீரர் மிதுன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மனைவி ஆர்த்தியுடன் கலந்து கொண்டுள்ளார்.

இதில் அருண்விஜய் அதிகமாக குடித்துவிட்டு செம போதையில் அதிகாலை, 3:00 மணிக்கு, தன் மனைவி ஆர்த்தியுடன் தனது சொகுசு காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அதிகமாக குடித்திருந்ததால் அருண்விஜய்யின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வேன் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

உடனே அங்கிருந்த பொலிசார் அருண்விஜயையும், அவரது மனைவியையும் விரைவாக வந்து மீட்டுள்ளனர்.

மேலும், காரில் இருந்த சேப்டி பலூன் ( safty baloon) மூலம் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதையடுத்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு பொலிசார், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்றபிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அருண் விஜய்யிடம், மாஜிஸ்திரேட் முன் அபராதத் தொகை செலுத்திவிட்டு, வாகனத்தை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

NTLRG_20160829151054470817

ஆனால், அருண் விஜய் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்து அங்கிருந்து ஓடி தலைமறைவாகியதோடு தனது கைப்பேசியையும் ‘சுவிட்ச் ஆப்’ செய்து வைத்துள்ளார்.

இதனால் சொகுசு காரையும் பறிமுதல் செய்ததோடு சைபர் கிரைம் பொலிசார் அவரது அலைபேசி டவர் சிக்னல்களை கண்காணித்து வருகின்றனர்.

SHARE