அமாவாசையில் பழிவாங்க போகிறதா சுவாதியின் ஆவி? சொல்கிறார் ஆவி அமுதன்

251

swathi1-680x365

தன்னை கொன்றவர்களை வருகிற அமாவாசை அன்று பழிவாங்க போகிறேன் என சுவாதியின் ஆவி தன்னிடம் கூறியதாக ஆவி அமுதன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவாதியின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன, தற்போது லேட்டஸ்டாக கிளம்பியுள்ள தகவல் “சுவாதியின் ஆவி”.

ஆவி அமுதன் என்பவர், கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஜெயலலிதாதான் முதல்வர் என்று எம்.ஜி.ஆர் ஆவி தன்னிடம் கூறியதாக பரபரப்பை ஏற்படுத்தியவர்.

அதேபோல், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், இந்திராகாந்தி ஆகிய ஆவிகளிடம் தான் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என்று கூறிவருகிறார்.

இந்நிலையில் இவர் கூறியுள்ள தகவல்கள் தான் இது, சுவாதியின் ஆவி என்னிடம் பேசியது, என்னை கொன்றவர்களை பலி வாங்காமல் விடமாட்டேன். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பினாலும், என்னிடம் இருந்து தப்பிக்க இயலாது, குற்றவாளி யார் என்பதை அவர்களை பழிவாங்கிய பின்னர் சொல்கிறேன்.

வருகிற அமாவாசை அன்று, குற்றவாளியை பழிவாங்கும் வேலையை ஆரம்பிக்கவிருக்கிறேன். மேலும் ராம்குமார் மிகவும் அமைதியானவன் என்று சுவாதியின் ஆவி கூறியது என ஆவி அமுதன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி தலைவிரி கோலத்தோடு அமர்ந்து அழுது கொண்டிருப்பதாகவும், அங்கு சுவாதியின் ஆவி உலாவுகிறது எனவும் பலர் கருத்துக்களை அள்ளிவிட்டனர். இந்நிலையில் ஆவி அமுதனின் இந்த தகவலும் வெளியானதால் சுவாதியின் வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது.

SHARE