பிரித்தானிய இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் திருமணம் செய்துக்கொண்ட நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் அவர்களது செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இதுமட்டுமில்லாமல், இருவரும் அடிக்கடி ஒருவரைக்கொருவர் குறைக் கூறிக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவில்லை என்றும் செய்திகள் வெளியானது.
இச்செய்திகளை தொடர்ந்து அரச குடும்பத்தின் நன்மைக்காக இருவரும் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும், இதுவரை அரசு குடும்பத்தில் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் போன்ற சோம்பேறியான இளவரசர் மற்றும் இளவரசியை மக்கள் பார்க்கவில்லை என்ற விமர்சனமும் தற்போது எழுந்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், பொது நிகழ்ச்சிகளில் ஆடம்பரமாக தங்களை காட்டிக்கொள்ள இருவரும் மக்கள் வரிப்பணத்தை அதிகளவில் செலவு செய்வதாகவும் பொதுமக்கள் புகார் கூறிவருவதும் இவர்களது விவாகரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆனால், இருவரும் விவாகரத்து பெறக்கூடாது என இரண்டாம் எலிசபெத் மகாராணி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருவரும் விவாகரத்து பெறக்கூடாது என்றால் மகாராணிக்கு அடுத்தப்படியாக இருவரும் பிரித்தானியாவிற்கு ராஜா, ராணியாக பதவி ஏற்க வேண்டும் எனவும் மகாராணிக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனினும், பரபரப்பாக வெளியாகியுள்ள இந்த செய்தி தொடர்பாக இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.