பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்ட தாத்தா சிக்கினார்!

229

police_new

மாத்தறையில் இருந்து அக்கரஸ்ஸ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பெண்களிடம் முறைகேடான முறையில் நடந்துக் கொண்ட முதியவரை (70) அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த முதியவரிடம் இருந்து ரூபா 35,000 பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிபட்டுள்ளனர்.

பஸ்ஸில் பயணிக்கும் அதிக பெண்களே இவ்வாறு பாதிக்கபடுவதாகவும், பல்கலைக்கழகத்திற்கு செல்லும் பெண்களிடம் சிலர் முறைகேடாக நடந்துக் கொள்வதாகவும் பஸ் சாரதி, பஸ் நடத்துனர் ஆகியோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதியவரை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திய போது அவர் மனநலம் குன்றியவர் என தெரிய வந்துள்ளதாகவும், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE