ஏ9 கனகராஜன்குளப் பகுதியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட புத்த சிலை ஒன்று நேற்று நள்ளிரவின் பின்னர் இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
சிங்களப் பௌத்த பேரினவாதிகளால் திட்டமிட்டு தமிழ் இனத்தின் மீதும் தமிழர் பிரதேசத்திலும் திணிக்கப்படும் மதரீதியான அத்துமீறல்களை தமிழ் மக்கள் எதிர்த்து வரும் நிலையில் இப்படியான சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
சமூகங்களுக்கிடையில் இன முறன்பாட்டை தோற்றுவிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.
இச் சிலை உடைப்பின் பின்னனியில் இராணுவப் புலனாய்வாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.