65 இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிச் சென்ற நபர் கொழும்பு கிரேண்பாஸ் பகுதியில் வைத்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.

250

கண்டி வர்த்தக மைய கட்டிட தொகுதியில் அமைந்துள்ள ஹட்டன் நெஷனல் வங்கியில் பணம் மீளப்பெறும் இயந்திரத்திற்கு இடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 65 இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிச் சென்ற நபர் கொழும்பு கிரேண்பாஸ் பகுதியில் வைத்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் எப்பாவளை பகுதி அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் இவர் கொழும்பு கிரேண்பாஸ் ஸ்டேஸ் வீதியில் அமைந்துள்ள பாலமொன்று அருமைகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேண்பாஸ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பி.ரசல் சொய்ஸா கேசரிக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹட்டன் நெஷனல் வங்கிக்கு சொந்தமான குறித்த தொகை பணத்தினை எடுத்துச் சென்று அவ்வங்கியின் கிளைகளில் உள்ள இடும் செயற்பாட்டுக்கான ஒப்பந்தம் அபான்ஸ் நிறுவனத்திடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த வங்கியின் கண்டி வர்த்தக மைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள கிளையின் பணம் மீளப்பெறுவதற்கான தானியக்க இயந்திரத்திற்கு இடுவதற்காக நேற்று பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகாரி என்ற குறித்த நபர் சாரதியாக பணியாற்றும் வாகனத்தில் ஹட்டன் நெஷனல் வங்கியின் அதிகாரிகள் பணத்தை எடுத்துக்கொண்டு கண்டி வர்த்தக மையக்கட்டிட தொகுதியின் வாகன தரிப்பிடத்திற்கு சென்றுள்ளனர்.

வர்த்தக கட்டிட தொகுதியின் ஹட்டன் நெஷனல் வங்கி பணம் மீளப்பெறும் இயந்திரத்திற்கு பணம் வைப்புச் செய்ய தேவையான பணம் தவிர்ந்த ஏனைய தொகையினை வாகன சாரதியின் பாதுகாப்பில் விடுத்துச் சென்றுள்ளனர்.

அத்தருணத்தில் தனது பாதுகாப்பில் விடுத்துச் செல்லப்பட்ட பணப் பெட்டியிலிருந்து 65 இலட்சம் ரூபா பணத்தினை குறித்த வாகன சாரதி காரின் பற்றரிக்குள் மறைத்து வைத்துள்ளார்.

அந்நேரத்தில் வர்த்தக கட்டிட தொகுதியின் ஹட்டன் நெஷனல் வங்கியின் திகனை கிளைக்கு இடவேண்டிய பணத்தொகையினை தாம் கொழும்பு தலைமை அலுவலகத்தில் மறந்து வைத்துவிட்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் மீண்டும் தலைமை அலுவலகத்திற்கு திரும்பியுள்ளனர்.

இதற்கு முன்னர் தலைமை அலுவலகத்தில் பணத்தினை மறந்து விட்டுச் சென்ற சந்தர்பங்கள் இருந்துள்ளமையினாலேயே வங்கியின் அதிகாரிகள் மறைக்கப்பட்ட பணம் தொடர்பில் பெரிதும் அவதானம் செலுத்தமால் தலைமை அலுவலகத்திற்கு மீளத்திரும்பியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த நபர் கொழும்பு ஒருகொடவத்தையில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் காரினை தரித்துவிட்டு தான் மறைத்து வைத்த பணத்தினை எடுத்துக்கொண்டு தனது வீடு நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் அவர் தனது மோட்டார் வண்டியில் முற்றாக முகத்தினை மூடிய தலைக்கவசம் ஒன்றிணை அணிந்துக்கொண்டு ஒருகொடவத்தை பாலம் ஊடகா பயணித்துள்ளார். அவ்விடத்தில் அவரை சந்தேகத்தின் பேரில் மடக்கிப்பிடித்த பொலிஸார் அவரிடத்தில் மேற்கொண்ட விசாரணைகளின் போது நடந்தவற்றை கூறினார். எவ்வாறாயினும் சந்தேக நபர் குறித்த தொகையில் ஒரு இலட்சம் ரூபாவினை செலவு செய்திருந்ததார்.

அதன்போது பணத்துடன் இல (88685) பொலிஸ் கான்ஸ்ரபல் கிருஷ்ணமூர்த்தி என்ற அதிகாரியினால் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட குறித்த சாரதி இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக உள்ளாக தெரிவித்தார்.police

SHARE