வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில்காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிழக்கு ஆளுநர் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்!

255

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் காணாமல் போனோரது உறவினர்கள் கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகி சுமார் ஒன்றரை மணிநேரம் வரை நீடித்தது.

வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், படுகொலைக்கும் வன்முறைக்கும் உள்ளானோரின் குடும்ப உறவுகள், கிராமிய பெண்கள் மற்றும் சாமூக அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பன ஒண்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வலிந்து கானாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறைகளே அவசியம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளும் ஏனைய சாட்சிகளும் இவ்விடயம் சார்ந்து செயற்படும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், நிலைமாறிகால நீதி முன்னெடுப்புகள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும், ஐ.நா ஸ்ரீலங்காவில் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளில் இணைப் பங்காளியாக வேண்டும் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு காணாமல் போனோரது உறவினர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

குறித்த கோரிக்கைகள் ஆங்கிய மகஜர் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, நல்லிணக்க பொபொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அங்கத்தவர் ஜதீந்திரா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.ring

ring01

SHARE