மனைவி மீது துப்பாக்கிச் சூடு – இராணுவ கேர்ணல் கைது!

246

arrest-slk.polce_21

இராணுவ கேர்ணலின் மனைவி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவ கேர்ணல் பிரதீப் குமார நெத்தசிங்கவை அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவ கேர்ணல் பிரதீப் குமார நெத்தசிங்கவின் மனைவி (45) துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்ட காயங்களால் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் இசுருப்புர பகுதியை சேர்ந்தவர் என்றும், மூன்று பிள்ளைகளின் தாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவ கேர்ணலிடம் ஞாயிற்றுக்கிழமை அத்துருகிரிய பொலிஸார் சுமார் ஒரு மணித்தியாலம் வரை வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE