புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்கள் அந்த அந்த நாடுகளுக்கு ஏற்ப வாழ்ந்தாலும் தமிழ் மொழி, கலை, கலாச்சார விழுமியங்களை பின்பற்ற தவறியதே இல்லே. இப்பொழுது அடுத்த தலை முறையினரும் தமிழ் கலைகளுள் நன்கு ஈடுபட்டு பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
அந்த வகையிலே, சுபாத தேவமனோகரன் எனும் இளம் நாட்டிய தாரகை, கனடா நாட்டிலே Her Story – The Battle Within, அதாவது அவளுடைய கதை – உள் நடக்கும் போராட்டம் எனும் தலைப்பில் ஒரு நாட்டிய நாடகத்தை இளம் கலைஞர்களை வைத்தே அரங்கேற்றியுள்ளார்.
இந்த படைப்புக்கு லங்காசிறி ஊடக அனுசரணை வழங்குகிறது. உங்களுடைய படைப்புகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் pr@lankasri.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.