உலகின் முதலாவது இடத்தை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பிடிக்கும் என இந்திய ஒருநாள் மற்றும் T20 அணியின் அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும், அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, இந்திய ஒருநாள் மற்றும் T20 அணியும் நன்றாக அமைந்துள்ளது போல டெஸ்ட் அணியும் சிறப்பாக அமைந்துள்ளது.
துடுப்பாட்டக்காரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இரண்டறை ஆண்டுகளாக எறக்குறைய இதே துடுப்பாட்டக்காரர்களை வைத்து தான் விளையாடியுள்ளோம். எனவே சிறந்த முறையில் கற்று நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியும்.
மேலும், நமது அணியில் 10 வேகப்பந்து வீச்சாளர்களும் சிறந்த உடல் தகுதியுடன் உள்ளனர். இது நமக்கு கிடைத்த ஒரு வரமாகும்.
மேலும், முதலிடத்திலும், இரண்டாவது இடத்திலும் உள்ள அணிகளுக்கும் நமக்கும் கடுகளவே வித்தியாசம் இருக்கிறது. எனவே இனி வரும் 13 டெஸ்ட் போட்டிகளும் நன்றாக அமைந்தால் உலகிலேயே நம் டெஸ்ட் கிரிக்கெட் அணி முதலிடத்தை பிடிக்கும் என டோனி தெரிவித்துள்ளார்.