அவுஸ்திரேலிய முன்னணி துடுப்பாட்டவீரரும், நட்சத்திர வீரருமான ஷான் மார்ஷ் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளார்.
பயிற்சியின் போது விரலில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்தே அவர் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து Physiotherapist David Beakley கூறியதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என அவுஸ்திரேலிய முன்னிலைப் பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து ஷான் மார்ஷ்க்கு எடுக்கப்பட்ட x-rayவில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதியானது.
எனவே குணமடைய தாய்நாடு திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஷான் மார்ஷ்க்கு பதிலாக Usman Khawaja அணியில் இடம்பெறுவார் என அவுஸ்திரேலிய தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 தோல்வியடைந்தது நினைவுக்கூரத்தக்கது.