நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இருபத்து மூன்று நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24 ஆம் நாளாகிய இன்று இரதோற்சவத் திருவிழா நடைபெறுகின்றது.
இக் கண்கொள்ளாக் காட்சியினை நாட்டின் பல பாகங்களில் இருக்கும் பக்தர்களும், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுமாக பக்திப் பரவசத்துடன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவை கண்டுகளித்து வருகின்றனர்.
இந்த திருவிழாக்களில் கொடியேற்றம், திருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாசவாகனத் திருவிழா, சப்பறம், தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன மிக முக்கியமானவை.
தேரேறி வரும் கந்தனின் அருளைப் பெறுவதற்கு பக்தர்கள் தேரைச் சூழ்ந்து இருக்கின்றதை காணக்கூடியதாக உள்ளது.