ரஜனியின் அடுத்த படத்தில் அமலா போல்….?

269

நடிகை அமலாபாலுக்கு தான் நடிக்க இருக்கும் வட சென்னை படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டதை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா விரும்பவில்லை. தான்னுடைய எதிர்ப்பையும் மீறி அமலாபாலுக்கு வாய்ப்பு வழங்கியதால் இந்த விவகாரத்தை ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினியிடம் கொண்டுசென்றதாக பேசப்பட்டது.

ஏற்கனவே நடிகர் தனுஷுக்கும், அமலா பாலுக்கும் இடையே கிசுகிசுக்கப்பட்டது. இதனால் தான் ஐஸ்வர்யா அமலாபாலுக்கு சிகப்பு கொடி காட்டியதாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தை ரஜினியிடம் கொண்டு சென்றதால் இதில் ரஜினி ராஜதந்திரமாக ஒரு முடிவெடுத்ததாகவும் தற்போது செய்திகள் வருகின்றன.

தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்துக்கு அமலா பாலை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ரஜினியின் ஜோடியாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டால். தற்போது தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையாக இருக்கும் அமலா பாலை இதில் ஒப்பந்தம் செய்தால் படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டி, ரஜினிக்கு ஒரு இளம் ஜோடி என ஒரு கணக்கு.

மற்றொரு முக்கியமான கணக்கு ஆறு அல்லது ஏழு மாதத்திற்கு அமலா பால், ரஜினியுடன் நடிக்க வேண்டி வரும். அதனால், ரஜினி மற்றும் ஐஸ்வர்யா கண்காணிப்பு வளையத்திற்குள் அமலாபாலை கொண்டு வந்துவிடலாம் என்பதே. மேலும், அமலாபால் ரஜினியுடன் நடித்தால் தனுஷ் அமலாபால் நட்புக்கான வாய்ப்பும் குறையும்.

SHARE