இறந்த தாயாரின் உடலை 12 கிமீ பைக்கில் கொண்டு வந்த மகன்

242

ஒடிசா மாநிலம் காலாகேண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின நபர் தானா மஜ்கி என்பவரின் மனைவி அனாங், காசநோய் காரணமாக, கடந்த 23–ந் தேதி பவானிபட்னா மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்குவதற்கு ஆஸ்பத்திரி அதிகாரிகள் மறுத்து விட்டதால், தானா மஜ்கி, தனது மனைவியின் உடலை போர்வையில் சுற்றி தனது தோளில் சுமந்து சென்றார். 10 கி.மீ. தூரம் அவர் சுமந்து சென்ற சம்பவம், சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பி ஏற்டுத்தியது. இந்து போல் சம்பவங்கள் நாட்டில்,அங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மத்திய பிரதேச மாநிலம் உலாட் கிராமத்தை சேர்ந்த பர்வதா பாய் என்ற 70 பெண் உடல நலல்குறைவால் சிரமப்பட்டு உள்ளார். அவரது மகன் மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்ல ஆம்புலன்சை பலமுறை அழைத்து உள்ளார்.

ஆனால் அவர்கள் வரமறுத்து விட்டனர் இதனால் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை நடுவில் உட்காரவைத்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பெண் உயிர் இழந்து உள்ளார். உடனடியாக மீண்டும் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த பெண்ணின் உடலை வாலிபர்கள் மோட்டார் சைக்கிளிலேயே கொண்டு வந்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.odisha-sons

SHARE