பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போயிங்-777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.பாகிஸ்தானை சேர்ந்த சகோதரிகள் மரியம் மசூத் மற்றும் ஏர்ரம் மசூத். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமான நிறுவனத்தில் பைலட்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் மூத்தவரான மரியம் மசூத் ஏற்கனவே போயிங் -777 விமானம் ஓட்டுவதற்கான தகுதி பெற்றுள்ளார். தங்கை ஏர்ரம் மசூத்தும் தற்போது போயிங் -777 ஓட்டுவதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தானில் முதன்முறையாக ஒரே நேரத்தில் போயிங் -777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
சகோதரிகள் இருவர் ஒரே எடைபிரிவில் போயிங் -777 விமானம் ஒட்டியதாக முன்பு எங்கும் ஆதாரங்கள் இல்லை என்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தான்யல் கிலானி தெரிவித்தார்.பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் ‘டான்’ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.