புனிதமாக கருதப்படும் விடயங்களில் துளசிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்துக்கள் பெரும்பாலும் தங்களது வீட்டில் ”துளசி மாடம்” வைத்திருப்பார்கள், அதிகாலையில் எழுந்து துளசி மாடத்தில் விளக்கேற்றி, மாடத்தை சுற்றிவந்து மனமுருகி வேண்டுவது வழக்கம்.
இதேபோன்று கோவில்களுக்கு சென்றாலும் துளசி தீர்த்தம், துளசி இலைகளை பிரசாதமாக கொடுப்பார்கள்.
இது ஏன் என்று என்றாவது சிந்தததுண்டா? துளசிக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று யோசித்து பார்த்ததுண்டா?.