முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதியில்  காணியை சுவீகரிக்க வந்த கடற்படை அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்!

295

Sri-Lankan-Navy

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக 617 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீடு நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட இருந்தது.

குறித்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு பிரதேச மக்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்துள்ளனர்.

இந்த நிலையை அறிந்த மாவட்ட செயலகம், குறித்த காணி அளவீடு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கு நேற்று அறிவித்திருந்தது.

எனினும் இன்று காலை கடற்படையின் முக்கிய தளபதிகள் வாட்டுவாகல் பகுதியில் காணி சுவீகரிப்புக்காக பிரசன்னமாகியிருந்தனர்.

காணி அளவீடு நடவடிக்கை இன்று நடைபெறாது என்ற தகவலை பிரதேச பொதுமக்கள் அதிகாரிகளுக்கு வழங்கியதை அடுத்து கடற்படை அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

SHARE