காதலி கடித்து, காதலன் பலி – மெக்சிகோவில் பரபரப்பு!…

271

ஜூலியோ கோன்சலஸ் (Julio Macias Gonzalez) மெக்சிகோவில் வசித்து வரும் 17 வயது வாலிபர். ஜூலியோ கோன்சலஸ்-ம் 24 வயது நிரம்பிய இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவரது காதலும் நன்றாக தான் சென்றுக் கொண்டிருந்தது, ஓர் இனிய மாலை வரை.

சில நாட்களுக்கு முன்னர், குடும்பத்துடன் டின்னர் உண்டுக் கொண்டு இருக்கும் போது ஜூலியோ கோன்சலஸ் -க்கு வலிப்பு வந்தது. டின்னர் டேபிளில் சுருண்டு விழுந்தார். இதனால் பிரைன் ஸ்ட்ரோக் உண்டாகி ஜூலியோ கோன்சலஸ் சில மணிகளில் பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலியின் முத்தம்!

வலிப்பு வர காரணம் அன்று டின்னர் உட்கொள்ளும் முன்னர் ஜூலியோ கோன்சலஸ்-க்கு அவரது காதலி கொடுத்த லவ் பைட் (முத்தமிட்டு கடிப்பது) தான் என தெரியவந்துள்ளது.

இரத்த கட்டி!

ஜூலியோ கோன்சலஸ்-ன் காதலி கொடுத்த காதல் கடியின் காரணமாக உண்டான இரத்த கட்டி, ஜூலியோ கோன்சலஸ்-ன் மூளை வரை பயணித்து சென்றுள்ளது. இதன் காரணமாக வலிப்பு வந்தது.

உதவி பயனளிக்கவில்லை!

மருத்துவ உதவியாளர்கள் உடனடியாக இடத்திற்கு வந்தும் கூட பயனேதும் இன்றி ஜூலியோ கோன்சலஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

லவ் பைட் – பிரைன் ஸ்ட்ரோக்!

லவ் பை என்ற பெயரில் ஜூலியோ கோன்சலஸ்-ன் காதலி கழுத்தில் கடித்து உறிஞ்சியதால் தான் இரத்த கட்டி உருவானது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது தான் ஜூலியோ கோன்சலஸ்-க்கு பிரைன் ஸ்ட்ரோக் ஏற்பட காரணமாக இருந்துள்ளது.

காதலி மாயம்!

தன் காதலன் இறப்புக்கு தான் காரணமா என்ற அச்சத்தில் காதலி மாயமாகிவிட்டார். ஜூலியோ கோன்சலஸ்-ன் பெற்றோர் காதலியால் தங்கள் மகன் இறந்தார் என குற்றம் சாற்றியுள்ளனர்.

இது முதல் முறையல்ல!

இந்த நிகழ்வு இதுவே முதல் முறை அல்ல, நியூசிலாந்த்தில் ஒருமுறை காதலன் ஒருவர் அவரது காதலிக்கு கழுத்தில் லவ் பைட் என்ற பெயரில் கடித்தால், கழுத்தின் முக்கிய நரம்பில் தாக்கம் உண்டாகி அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் வயது 44.

மருத்துவர்கள் குழப்பம்!

திடீர் பக்கவாதத்திற்கு என்ன காரணம் என மருத்துவர்கள் போராடி கடைசியில் லவ் பைட் தான் காரணம் என கண்டறிந்தனர். டாக்டர். டெட்டி “எனது மருத்துவர் பணியிலேயே இதுதான் முதல் முறை ஒருவர் லவ் பைட் காரணமாக மருத்துவமனையில் அடிமிட் ஆகி பார்க்கிறேன்” என வியப்பாக கூறியிருந்தார்.

மருத்துவர் எச்சரிக்கை!

நமது உடலின் அணித்து பாகங்களும் மூளையுடன் இணைந்துள்ளது. இந்த அனைத்து நரம்புகளும் கழுத்தின் வழியாக தான் மூளையை சென்றடைகிறது. இதனால் தான் கழுத்தை வேகமாக திருப்பவே கூடாது எனவும், கை குழந்தைகளை கையாளும் போது கழுத்து பகுதியை லாவகமாக பிடிக்க வேண்டும்.
லவ் பைட் என்ற பெயரில் கடிக்கும் போது கழுத்தின் முக்கியமான நரம்புகளில் தாக்கம் ஏற்படும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

 

SHARE