கிரிக்கெட் விளையாட்டுக்கு சமமான சிந்து.  எப்படி தெரியுமா?

246

கிரிக்கெட் இல்லாத விளையாட்டு போட்டியை இந்திய ரசிகர்கள் அதிகம் பேர் பார்த்தது, ரியோ ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் விளையாடிய சிந்துவின் ஆட்டமே தான் என பிரபல தனியார் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள ரசிகர்கள் பெரும்பாலும் கிரிக்கெட்டைத்தான் அதிகம் விரும்பி பார்ப்பார்கள்.

தற்போது நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கரோலினாவும், இந்தியா சார்பில் சிந்துவும் மோதினர்.

இப்போட்டியில் கரோலினா வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றார். சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ரியோ ஒலிம்பிக்கில் சிந்து மோதிய பேட்மிண்டன் இறுதிப்போட்டியை 1 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுகளித்ததாக தனியார் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் கிரிக்கெட் இல்லாத ஒரு போட்டியை எந்த ஒரு தொலைக்காட்சிகளிலும் இந்த அளவுக்கு இதுவரை ரசிகர்கள் பார்த்தது இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)

 

SHARE