ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த நாளை முன்னிட்டு யாழில் விசேட சத்திரசிகிச்சை!

565

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் கண்களின் விழிவெண்படலத்தை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செயற் திட்டம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் 3ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை ஒட்டியதாக ஜனாதிபதி செயலகத்தின் சமூக தொண்டு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த செயற் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதற்கமைய மேற்படி செயற் திட்டம் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுனர் வைத்தியர் எம்.மலரவன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்தை யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் பவனாந்தராஜா ஆரம்பித்து வைத்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த சிகிச்சை முகாமின் மூலம் நூற்றிற்கு மேற்பட்டவர்களுக்கு விழிவெண்படலத்தை அகற்ற திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

 

 

 

SHARE