சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் வழி தெரியாமல் சிக்கித் தவித்த ஹங்கேரி சுற்றுலா பயணியை, பூனை ஒன்று வழிகாட்டி பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு வந்து சேர்த்துள்ள சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து ஹங்கேரி சுற்றுலா பயணி கூறுகையில், Gimmelwald கிராமத்திற்கு அருகே உள்ள மலையில் பயணித்தேன். பின்னர், அங்கிருந்து கீழே இறங்கும் வழியை மறந்துவிட்டேன்.
விடுதிக்கு செல்லும் வழியை வரைப்படத்தில் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். மலையில் இருந்து கீழே இறங்கும் அதிகாரப்பூர்வ வழி மூடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வெள்ளை மற்றும் கருப்பு நிறத்துடன் இருந்து பூனை ஒன்று நான் தவித்துக்கொண்டிருந்ததை பார்த்தது. பின்னர் ஒரு பாதையில் என்னை வழிநடத்தி சென்றது.
பின்னால், நான் வருகிறேனா என பார்த்துக்கெண்டே பயணித்தது. இறுதியில் என்னை பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு வந்து சேர்த்தது என கூறியுள்ளார்.
தற்போது, சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிட்டுள்ள அவரின் கதை மற்றும் பூனையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும், கடந்த 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட அதே பூனையின் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.