முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமுள்ள 42 ஆயிரத்து 178 குடும்பங்களில் 6 ஆயிரத்து 260 குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பெண் தலைமைத்துவ குடும்பங்களில் ஆயிரத்து 830 குடும்பங்கள் நேரடியாக போரால் குடும்பத்தலைவர்களை இழந்த குடும்பங்களாக உள்ளனர்.
கரைதுரைபற்றுப்பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 677 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 441 குடும்பங்கள் நேரடியாக போரால் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்களாகும்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 470 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 434 குடும்பங்கள் நேரடியாக போரால் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்களாகும்.
துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 498 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 176 குடும்பங்கள் நேரடியாக போரால் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்களாகும்.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 376 குடும்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 411 குடும்பங்கள் போரால் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்களாகும்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 905 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. குறித்த குடம்பங்களில் 269 குடும்பங்கள் நேரடியாக போரால் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்களாகும்.
வெலிஓயாவில் 334 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. 69 குடும்பங்கள் நேரடியாக போரால் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்களாகும்.
இதேவேளை மாவட்டத்தில் உள்ள மொத்த குடும்பங்களில் 15 சதவீதமான குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாகவுள்ளன.
முல்லைத்தீவில் கணவனை இழந்த குடும்பங்களில் 30 சதவீதமானவர்கள் போரினாலேயே கணவரை இழந்துள்ளதாக புள்ளவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.