புனர்வாழ்வு பெற்றவர்கள் மற்றும் பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் எதிர்வரும் 07ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் 500 மூக்குக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு அருகாமையில் உள்ள கலாச்சார மண்டபத்தில் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள புனர்வாழ்வு பெற்றவர்கள் மற்றும் பொது மக்களை கலந்து பயன்பெற்றுக்கொள்ளுமாறும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்துமத கலாச்சார அலுவல்கள் அமைச்சினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.