மஹிந்தவை நம்பிக்கொண்டிருக்க இனியும் நாம் முட்டாள்கள் அல்ல –  மஹிந்த ஆதரவாளர்கள்!

524

2360800-3x2-940x627

மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தார் எவர் மீதும் துளியளவும் இனிமேல் நம்பிக்கையில்லை என சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்தார்கள்.

சுதந்திரக்கட்சியின் 65ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு குருநாகலில் நடைபெறவுள்ள மாநாட்டில் மாத்தறை மாவட்ட சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகளை கலந்து கொள்ள வேண்டி அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தனவின் ஏற்பாட்டில் நேற்று மாத்தறையில் கூட்டம் ஒன்று இடம் பெற்றது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தார்கள்.

மேலும் ஆரம்பத்தில் கட்சியியே முக்கியம் கட்சித்தலைவர்களும் உறுப்பினர்களும் அல்ல எனக்காணப்பட்ட நிலை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. தனக்கு தேவையான வகையில் கட்சியை பயன் படுத்துவது வேதனையான விடயமே.

பாதயாத்திரைகளையும் போராட்டங்களையும் தமக்கு அவசியமான போது மட்டும் நடத்திக் கொள்கின்றார்கள். மஹிந்த பாதயாத்திரையில் ஈடுபட்டது அவரின் இலாபத்திற்கே. அப்போது அவருக்காக பாதயாத்திரை சென்றார், ஆனால் மஹிந்த தற்போது கட்சியை விட்டு சென்று விட்டார்.

இனிமேலும் மஹிந்த மீதோ அல்லது அவரின் குடும்பத்தார் மீதோ துளி அளவும் எமக்கு நம்பிக்கை இல்லை .

இவ்வாறான அவரின் செயற்பாடுகளை இனிமேலும் நம்பிக் கொண்டிருக்க நாம் முட்டாள்களும் அல்ல, மைத்திரி தலைமையில் இனி நாம் செயற்படுவோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

கட்சியை பலப்படுத்த மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார் அதனால் அவருக்கு ஆதரவாகவே இனி நாம் செயற்படுவோம்.

நூற்றுக்கு 75 சதவீதமான சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் மாத்தறையில் இருக்கின்றார்கள் இம்முறை அவர்கள் அனைவரும் குருநாகலில் இடம் பெறும் 65ஆவது மாநாட்டில் கலந்து கொள்வார்கள் எனவும் சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE