பின்னியை விவாகரத்து செய்துவிடுங்கள்! மெளனம் கலைத்து பதிலடி கொடுத்த மாயண்டி லங்கர்

601

625.500.560.350.160.300.053.800.748.160.70

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியை தொடர்ந்து கிண்டல் செய்த ரசிகர் ஒருவருக்கு அவருடையை மனைவி மாயண்டி லங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடந்தது.

இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்டூவர்ட் பின்னி ஒரு ஓவரில் 5 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். இது ரசிகர்களை வெறுப்பேற்றியது.

கடைசி ஓவரில் டோனியால் 1 ஓட்டங்கள் எடுக்க முடியாமல் போக 1 ஓட்டத்தால் மொத்த தொடரையும் இந்தியா இழந்தது.

இந்நிலையில் இந்திய ரசிகர்கள் டுவிட்டரில் பின்னியை கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் அவரது மனைவியும், போட்டி தொகுப்பாளருமான மாயண்டி லங்கரையும் சீண்ட ஆரம்பித்தனர்.

இப்படிப்பட்டவருக்கு இப்படிப்பட்ட கணவரா என்று கருத்து தெரித்தனர். இருப்பினும் மாயண்டி லங்கர் தொடர்ந்து அமைதி காத்து வந்தார்.

இந்த நிலையில் ஒருவர் பின்னியை விவாகரத்து செய்விட்டு, தற்கொலை செய்துவிடுமாறு கூறினார்.

இதனால் கடுப்பான மாயாண்டி லங்கர், டுவிட்டரில் சீண்டியவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வண்ணம் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், நான் 18 வயதில் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை தங்கம் வெட்டி எடுப்பவர் என்று அழைப்பதை விட்டு விட்டு, வேலைக்கு போய் உன்னையும், உன் குடும்பத்தையும் முதலில் கவனி என்று கூறியுள்ளார்.

SHARE