மேத்யூஸ் “அவுட்”.. திசர பெரேரா அதிரடி நீக்கம்!

557

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் மேத்யூஸ்க்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதே போல் பவுன்சர் பந்து தலையில் தாக்கியதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மேத்யூஸ் ஆடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக உபுல் தரங்கா சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழு தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தகன் மற்றும் சகலதுறை வீரர் திசர பெரேரா நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக டிக்வெல்ல, ஷனக ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி எதிர்வரும் 4ம் திகதி பல்லேகேலவில் நடக்கிறது.

SHARE