சவூதி மற்றும் குவைத்தில் பல இன்னல்களை அனுபவித்த பெண்கள்!

267

பெண்கள்

சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் பல இன்னல்களுக்கு மத்தியில் பணிப்பெண்களாக வேலை செய்த இலங்கைப் பெண்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு 132 பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்கள் இலங்கை தூதரகத்திலும் பாதுகாப்பு மையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நாடு திரும்பிய 132 பெண்களில் இருவருக்கு சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE