குதிரைகள் சாப்பிடும் கொள்ளுவில் இவ்வளவு நன்மைகளா!

258

கொள்ளு ஒருவகை பயறு வகையைச் சார்ந்தது,இதற்கு முதிரை என்று மற்றொரு பெயரும் உள்ளது.

“இளைத்தவனுக்கு எள்ளு , கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழியின் மூலம் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏற்றது என அறிந்து கொள்ளலாம்.

மேலும் கொள்ளுவை நம்முடைய அன்றாட உணவில் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு, கொள்ளு பொடி என்று சமைத்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

கொள்ளு பருப்பை ஊறவைத்து, அந்த நீரையும் பருப்பையும் தினமும் சாப்பிட்டு வந்தால், நமக்கு கிடைக்கும் அதன் பயன்களைப் பற்றி பார்ப்போம்.

பயன்கள்
  • உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, கொழுப்புத் தன்மையை குறைத்து ஊளைச்சதையை குறைக்கிறது.
  • கொள்ளுப் பருப்பில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்தினால் ஜலதோஷம் குணமாகுவதுடன், உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும்.
  • வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள், வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மற்றும் மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தி பிரசவ அழுக்கை வெளியேற்றுகிறது.
  • குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போய்விடும்.
SHARE