உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் குறித்து மலேசிய அரசாங்கம் தமது கவலையை வெளியிட்டுள்ளது.

223

thumb_Sri-Lankan-High-Commissioner-in-Malaysia_-Ibrahim-Sahib-Ansar_-was-beaten-up-by-local-Tamils

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமை குறித்து மலேசிய அரசாங்கம் தமது கவலையை வெளியிட்டுள்ளது

கடந்த 4ஆம் திகதியன்று உயர்ஸ்தானிகர் அன்சார் தாக்குதலுக்கு உள்ளானார். இதன்போது அவர் சிறுகாயங்களுக்கு உள்ளானார்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் கவலை கொள்வதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குற்றவாளிகள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை இலங்கை உயர்ஸ்தானிகரத்துடன் இணைந்து உறுதிப்படுத்தவுள்ளதாகவும் இப்ராஹிம் அன்சார் தெரிவித்துள்ளார்.

மலேசியா இந்த விடயத்தில் உயர்ஸ்தானிகருக்கு பாதுகாப்பு வழங்குவதில் தோல்வி கண்டுள்ளதாக நேற்று இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்திய நிலையிலேயே மலேசிய வெளியுறவு அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது

SHARE