அருள்மிகு ஸ்ரீ கணேசர் தேவஸ்தானம்கலைக்கட்டிய வேட்டைத் திருவிழா!

565

கல்முனை மாநகர் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ கணேசர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவத்தின் எட்டாம் நாள் உற்சவத்தின் விசேட நிகழ்வாக திருவேட்டை நேற்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த திருவேட்டைத் திருவிழாவில் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் கலந்துகொண்டு நிகழ்வை அலங்கரித்ததுடன் மிகவும் சிறப்பான முறையில் நடாத்தினார்.

ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்றதும் சுவாமி வெளி வீதி வந்ததும் திருவேட்டையாடினர். திருவேட்டையின் போது பல வகையான ஆயுதங்கள் உருவாக்கி அதனைக் கொண்டு திருவேட்டை இடம்பெற்றது.

இலங்கையின் பல இந்து ஆலயங்களில் நடைபெறும் திருவேட்டை நிகழ்வை விட முற்றிலும் வேறுபட்டதும் வியக்கவைக்கும் வாள்வேட்டை அதனோடு ஒட்டியாதன வாள்வீச்சுக்கலை போன்ற பல மெய்சிலுக்கும் விடயங்களையும் தெய்வீக யாதார்த்ததையும் உணர்த்தும் திருவேட்டையாக கல்முனை நற்பிட்டிமுனை கணேசர் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது.

திருவேட்டைத் திருவிழாவாகிய நேற்றைய தினம் அதிகளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து, ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதும் நடைபெற்ற விசேட திருவிழாவான திருவேட்டைத் திருவிழாவையும் கண்டு மகிழ்ந்ததை அவதானிக்க கூடியதாயிருந்தது.

நேற்றைய தின திருவேட்டை உற்சவத்தினைத் தொடர்ந்து 10 நாட்களைக் கொண்ட கணேசர் தேவஸ்தான உற்சவப் பெருவிழாவானது இன்று 06.09.2016 செவ்வாய்க் கிழமை சமுத்திர தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (7) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (8)

SHARE