முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நிலைகொண்டிருந்த படையினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட யுத்த போராட்டத்தில் பல உயிர்களை அர்ப்பணித்துள்ள தமிழ் மக்களுக்கு முழங்காவில் துயிலுமில்லம் விடுவிக்கின்ற விடயம் மனதில் ஒரு அமைதியை கொடுத்துள்ளது.
தொடர்ந்தும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அரசாங்கம் இதய சுத்தியுடன் எடுக்கும் முயற்சிகள் நிரந்தரமான அமைதியையும் உரிமையையும் பெறுதலை கொண்டுவரும் என பொதுமக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.