பெண்ணுக்கு அழகு தருவது அவளுடைய கூந்தல் தான், இன்றைய காலகட்டத்தில் ரசாயன பொருட்களை அதிகம் உபயோகிப்பதால் முடி உதிர்கிறது.
இதனால் அடர்த்தி குறைவதுடன் முடி சார்ந்த பிரச்னைகள் அதிகம் வருகிறது.
இதற்கு சூப்பரான தீர்வு தான் வெந்தயம், இதில்இரும்புசத்தும், தாது சத்துக்களும் அதிகம் உள்ளது.
உடலுக்கு அதிக குளிர்ச்சியை தந்து முடி உதிர்வதையும் தடுக்கிறது.
வெந்தயத்தை நன்கு அரைத்து, அதனுடன் ஆலிவ் ஆயில் மற்றும் கெட்டியான தயிரையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
பின்னர் தலை குளித்து வந்தால், ஒரு மாதத்திலேயே மாற்றம் காணலாம்.