பிரான்ஸ், மேற்கு ஐரோப்பாவின் மத்தியதரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாடு.
அதன் தலைநகரமான பாரீஸ் உலகின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்று. அங்குள்ள ஈஃபில் கோபுரம் பிரான்ஸின் தேச அடையாளம், உலக அதிசயங்களில் ஒன்று.
பிரான்ஸை மத்தியதரைக்கடல் தழுவுவதால் பல நீளமான அழகிய கடற்கரைகள் அதன் சுற்றுலா துறைக்கே சுதி ஏற்றுகின்றன.
லூவார் உட்பட்ட உலகின் சிறந்த கலை அருங்காட்சியகங்கள், நவீன மாடலான வீடுகள் இங்கு புகழானவை.
மேலும், இங்கு ஒயின், ஆடம்பரமான மெத்தைகள், பழமையான லாஸ்காக்ஸ் குகை ஓவியங்கள், லியோன் ரோமன் திரையரங்கு, பரந்த அரண்மனை என வரலாற்று புகழான விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். வாருங்கள் ஒவ்வொரு நகராய் நேரில் சென்று பார்க்கலாம்.
பாரிஸ்
ஐரோப்பாவின் முதன்மையான நகரமான பாரிஸ் கலை, கலாச்சாரம், நாகரிகம், நுகர்வுக்கு ஒரு உலக மையமாக விளங்குகிறது.
அதன் 19 ம் நூற்றாண்டு நகர அமைப்பு, குறுக்கும் நெடுக்குமாக அமைந்திருப்பது. பரந்த அகலமான ஒரு நதி போல தெருக்கள் காட்சியளிக்கிறது.
12 ம் நூற்றாண்டின் கோதிக் நோட்ரே டேம் கதீட்ரல், மேலும், கஃபே கலாச்சாரம், ஃப்ஃபோர்க் செயிண்ட் ஹோனரின் வடிவமைப்புகள் இங்குள்ள சில சிறப்புகள்.
லூவார் அருங்காட்சியத்தில் உள்ள டாவின்சியின் ”மோனாலிசா” ஓவியம், ’முஸ்ஸீ டி ஒர்சே’ கலை படைப்பில் மோனட், டெகாஸ், ரினோய்ர் போன்றவர்களின் சிறந்த வேலைப்பாடு.
ரம்மியமான நதிக்கரைகள், மலை உச்சிகளின் பனோரமா காட்சிகள், வித்தியாசமான உணவகங்கள், சந்தைகள் அங்கு விற்கும் பொருள்கள் அனைத்தும் பிரான்ஸின் நாகரிகமான பாரம்பரிய உணவு முறைக்கு சான்று.
ஸ்ட்ரெஸ்போர்க்
ஸ்ட்ரெஸ்போர்க், பிரான்ஸின் வடகிழக்கு நகரங்களான அல்ஸாஸ், சம்பனே, ஆர்டென்னே, லோர்ரெனே நகரங்களின் தலைநகரம். இங்குதான் ஐரோப்பிய பாராளுமன்றம் உள்ளது.
இது ஜெர்மனை ஒட்டியுள்ளதால் இரண்டின் கலாச்சாரமும் காணப்படுகிறது. இங்குள்ள வீடமைப்புகள் தனித்துவமான சிறப்புடையது. அது பிரஞ்சு- ஜெர்மன் கட்டடக்கலை பாணியை சொல்கிறது.
இங்கு கதீட்ரல் நோட்ரோ டேமுக்கு அடுத்து, வானியல் கடிகாரம், அதிலிருந்து 140 கி.மீ. தூரத்தில் உள்ள ரினே ஆறு பார்க்க தக்கது. மேலும், இந்த நகரம் ஒரு நதியால் சூழப்பட்டதால் தீவாக காட்சியளிக்கிறது.
16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மத்தியதரைக்கடல் பாலங்கள், கால்வாய்கள், மரக்கட்டைகளால் ஆன வீடுகள், அதில் பரம்பரியமான மது அருந்தும் அறைகளும் உள்ளன. அவை இன்னும் பழமை சுமந்து நிற்கின்றன. கூட்டன்பர்க்கின் பழைய சமாதி, 1585 ல் கட்டப்பட்ட டவுன் ஹால் பார்க்ககூடியன.
டூர்ஸ்
டூர்ஸ் (Tours) ஒரு பல்கலைக்கழக நகரம். இது பிரான்ஸின் செர் மற்றும் லாய்ரே ஆறுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கல்லிக் ரோமானியர்கள் குடியேறிய பகுதி.
லாய்ரே பள்ளத்தாக்கில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த நுழைவாயில்கள், அலங்கார கோபுரங்கள், தேவாலயங்கள் மறுமலர்ச்சியின் நினைவுச் சின்னங்களாக உள்ளன.
மேலும், வரலாற்று இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட அமைதியான முற்றங்கள், உருக்குலைந்த கோபுரங்கள், பழமையான கடைகள், உணவகங்கள், சந்தைகள் கலந்து இருப்பது அழகு. பாதுகாக்கப்பட்ட இறைச்சி, பாலாடைக்கட்டி விற்பனை இங்கு சிறப்பு.
நீஸ்
பிரான்ஸில் நீஸ் கடற்கரை மிகச்சிறந்த ஒரு சுற்றுலாத்தலம். அரைகோளமாக வளைந்த அழகான கடற்கரை அமைப்பு ஒரு சிறப்பு என்றால். எந்த கடற்கரைக்கும் இல்லாத கூலாங்கல் செறிந்த கரைப்பகுதி இன்னொரு புதுமையான ஈர்ப்பு.
கலைஞர்களை ஈர்க்கும் கடற்கரை என்ற பெருமை இதற்கு உண்டு. கிரேக்கர்கள்தான் முதலில் இதன் எழிலில் மயங்கி வடிவமைத்தனர். பிறகு, 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் அதிசயமென மேம்படுத்தினார்கள். யாரையும் ஈர்க்கும் நைஸ் சுற்றுலாத்தலம் நீஸ்.
புர்கண்டி
புர்கண்டி, பிரான்ஸின் மத்திய கிழக்குப்பகுதியில் உள்ள வரலாற்று நகரம். இங்கு ஒயின் பிரபலமானது. இங்கு வீதிகள், வீடுகள் சொகுசு விடுதிகள், மற்றும் கடுகு பிரபலம்.
1787 ல் கட்டப்பட்ட அரண்மனையில் முஸ்ஸீ தேஸ் பேவுக்ஸ் ஓவியங்கள் புகழானது. மேலும், காயிடிலோன் கோட்டை, மோர்வன் என்ற இயற்கையோடு ஒட்டிய ஏரியும் பூங்காவும், க்லுனி அப்பே என்ற ரோமானியர்களின் பழமையான புனித தேவாலய வளாகம் பார்க்கலாம்.
போர்டோக்ஸ்
இது தென்மேற்கு பிரான்ஸில் உள்ள ஒரு ஒயின் உற்பத்தி நகரம். இது கரோன்னி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமே. 18 மற்றும் 19 ம் நூற்ராண்டுகளில் அமைந்துள்ள விடுதிகள், அருங்காட்சியங்கள், பொதுதோட்டங்கள், வளைந்த நதியின் நளினங்கள் அருமை.
எல்லாவற்றையும் விட மக்கள் விரும்பி ரசிக்கும் பெரிய டி லா போர்ஸ் என்ற ஒரே மாதிரி மூன்று கட்டடங்கள் தனிதனியாகவும் அருகிலும் ஆற்றில் அமைந்து, அதன் பிம்பங்கள் நீரில் பிரதிபலிப்பது கொள்ளை அழகுதான்.