மலேசியாவில் இடம்பெற்ற சம்பவம் இலங்கையிலும் நடைபெறலாம்.- நாமல் ராஜபக்ஸ

236

namal-rajapaksha1

மலேசியாவில் புலம்பெயர் தமிழர்களால் கடந்த வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் இலங்கையிலும் ஏற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எனவே மலேசியாவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரசு அதிக அவதானம் செலுத்தவது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் மஹிந்தவிற்கு எதிராக தாக்குதல் இடம்பெற்றது, அவருக்கு பலத்த எதிர்ப்புகள் காணப்பட்டது என்று தினமும் கூறி சந்தோசமடையும் விடயம் அல்ல இது எனக் குறிப்பிட்டுள்ள அவர்,

இந்த சம்பவத்தின் பின்னர் நாம் மேலும் எமது தேசிய பாதுகாப்பை பற்றி சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளி விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மலேசியாவில் இந்த தாக்குதலை மேற்கொள்ள முடியுமெனில், இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதற்கு அதிக காலம் செல்லப் போவதில்லை.

ஏனெனில் 32 கிலோமீற்றர் தூரத்திலேயே இந்தியாவிலிருந்து இலங்கை அமைந்துள்ளதாகவும் ,அவர்கள் இங்கு வருவதற்கு சில மணி நேரங்களே போதும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE