உடல் எடை அதிகமா இருக்குன்னு கவலையா?

261

உடல் எடை அதிகமாக உள்ளது என்று வருந்துபவரா நீங்கள், இனிமேல் கவலை வேண்டாம்.

உங்களின் எடையை குறைத்து, ஸ்லிம்மாக தினமும் காலை உணவாக இரண்டு முட்டைகள் மட்டுமே சாப்பிடுங்கள்.

இவ்வாறு சாப்பிடுவதால் அதிக புரோட்டீன் சத்துகள் கிடைக்கிறது, மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்து, உடம்பில் உள்ள கலோரிகள் குறைக்கப்பட்டு, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது.

முட்டையில் கொழுப்பு, புரதம், விட்டமின்கள், இரும்புச்சத்துகள், அயோடின், கால்சியம், போலிக் அமிலம் போன்ற சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளது.

  • குழந்தைகளிடம் போதிய வளர்ச்சியின்மை, குறைவான எடை போன்ற பிரச்சனைகள் குணமாகின்றன.
  • குழந்தைகளின் செயல்களான நடப்பது, பேசுவது, சிந்திப்பது போன்றவற்றில் மந்த நிலைகள் ஏற்பட்டால், முட்டைகளை உணவில் சேர்த்து கொடுக்க வேண்டும்.
  • சில குழந்தைகள் உடலில் எடை இல்லாமல் வயிறு உப்பி, சூம்பிய கை கால்களுடன் இருக்கும். இந்த பிரச்சனைகளுக்கும் முட்டை பயனளிக்கிறது.
  • முடி கொட்டுவது, செம்பட்டை ஆகுதல், கண்களில் வறட்சி ஏற்பட்டு பார்வை குறைபாடு, மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், நெஞ்சு படபடத்தல் போன்ற பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது.
SHARE