நாயுடன் தான் தூங்க வேண்டும்! வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்திய ஹிமன்சு பாட்டியா

247

அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிமன்சு பாட்டியா மீது வேலைக்காரப் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

ரோஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் அமெரி்க்காவின் மிசவவுரி மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் இதற்குக் கிளைகள் உள்ளன. இதன் தலைமை செயலதிகாரி பொறுப்பில் இருந்து வருபவர் கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட ஹிமன்சு பாட்டியா.

இந்நிலையில் இவர் மீது வீட்டு வேலைக்காரப் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக அந்த நாட்டு தொழிலாளர் நல அமைச்சகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

அந்த புகாரில், பாட்டியா வேலைக்காரப் பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்டார். அப்பெண்ணை நாய்களுடன் படுக்குமாறு கொடுமைப்படுத்தியுள்ளார்.

மேலும், குறைவான சம்பளத்திற்கு வேலைக்காரப் பெண்ணை தினசரி 15 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கியுள்ளார்.

அவருக்கு உடம்பு சரியில்லாவிட்டால் உரிய முறையில் கவனித்துக் கொள்வதும் இல்லை. சாப்பாடு கூட தராமல் பல நாட்கள் தூங்க வைத்துள்ளார்.

அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து வைத்துள்ளார். வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.

இதனால் வேலைக்கார பெண் கிட்டத்தட்ட வீட்டுச் சிறை போல வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளார் என்று பாட்டியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து வந்துள்ள புகாரை அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SHARE