வித்தியா கொலைச் சந்தேக நபர்கள் ‘பொலிசாரைக் கொலை செய்வோம்‘ அச்சுறுத்திய காணொளி நீதவானிடம்

288

வித்தியா கொலைச் சந்தேக நபர்கள் ‘பொலிசாரைக் கொலை செய்வோம்‘ என அச்சுறுத்திய காணொளி நீதவானிடம் புங்குடுதீவு மாணவியின் கொலைச் சந்தேகநபர்கள், தம்கைக் கைதுசெய்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கொலை செய்வோம் என அச்சுறுத்தல் விடுத்த காணொளியை, ஊடகவியலாளர் ஒருவர் ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியாலிடம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) சமர்ப்பித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சந்தேகநபர் ஒருவர் தம்மைக் கைதுசெய்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரைக் கொலை செய்வேன் என நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

அது தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடக நிறுவனத்திடம், கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பான ஆதாரத்தை நீதிமன்றம் கோரியிருந்தது.

இந்நிலையில், கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பான காணொளி ஆதாரதை, குறித்த ஊடக நிறுவன ஊடகவியலாளர் நீதவானிடம் சமர்ப்பித்துள்ளார்.

SHARE