பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரை கடத்திய நபர்கள் கைது!

241

arrest-slk-polce_21

பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கார் ஒன்றில் கடத்திச் சென்ற மூன்று பேரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே வர்த்தகரை கடத்திச் சென்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE