8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தவரை 19 வருடம் கழித்து சிறையில் தள்ளிய பெண் பொலிஸ்

242

அமெரிக்காவில் சிறுவயதாக இருந்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பெண் பொலிஸ் ஒருவர் 19 வருடம் கழித்து சிறையில் அடைத்துள்ளார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் என்ற பகுதியில் பெண் பொலிஸ் ஒருவர் தனக்கு 8 வயதாக இருக்கும் பொழுது தொடர்ந்து நான்கு வருடம் பாலியல் தொல்லை அளித்த Erlis Chaisson என்ற நபரை சிறையில் அடைக்க எண்ணியுள்ளார்.

இந்நிலையில், Erlis Chaisson – னிடம் தனியாக சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, பெண் பொலிஸ் Chaisson பேசுவதை பதிவு செய்வதற்கு தனது ஆடையில் டேப் ஒன்றினை மறைத்து வைத்துக் கொண்டு சக தோழிகளுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், அப்பெண் பொலிஸ் எதிர்பார்த்தது போலவே chaisson தான் சிறுவயதில் 6 முறை பாலியல் தொல்லை கொடுத்தேன் என ஒப்புக் கொள்ள அவர் பேசியதையே வக்குமூலமாக வைத்து chaisson-யை கைது செய்துள்ளார்.

பின்பு, chaisson-யை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தான் எண்ணியவாறே அவருக்கு ஆயுள் தண்டனையை பெற்றுக் கொடுத்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அந்த பெண் பொலிஸ் அதிகாரி கூறுகையில், ‘‘சட்டத்தை அமல்படுத்துவதே எனது பணி. எனவேதான் சிறுவயதில் எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபரை சிறையில் அடைத்தேன்’’ என்று கூறியுள்ளார்.

SHARE