வடக்கில் படையினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம்! இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன

246

brig-roshan-seniviratne-380-seithy

சொந்தத் தேவைக்கே இராணுவத்தினர் வடக்கில் விவசாயம் செய்கின்றார்கள் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் படையினர் விவசாயம் செய்து அறுவடையை விற்பனை செய்வதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது இராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகும். வர்த்தக நோக்கங்களுக்காக படையினர் விவசாயம் செய்யவில்லை.

வடக்கில் இராணுவத்தில் மிக நீண்ட காலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாய நடவடிக்கைகளினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

இதனால் இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றோம் என பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

SHARE