சுவாதி படுகொலை வழக்கு தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், வழக்கை வாதாடும் சிறப்பு அரச சட்டத்தரணியாக கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி சுவாதி கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் ராம்குமார் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எனினும், அவரது கைதில் பல சர்ச்சைகள் நிலவுகின்றன. உண்மையான குற்றவாளி ராம்குமார் இல்லை என ஒரு தரப்பு தீவிரமாக வாதிட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ராம்குமாருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும், ஆவணங்களையும் அரச தரப்பு தீவிரமாக திரட்டி வந்ததுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் இது நாள் வரை அரச தரப்பில் கொளஞ்சிநாதன் என்பவர் முன்னிலையாகி வந்த நிலையில் தற்போது அவரை அரசு மாற்றி விட்டது. அவருக்கு பதிலாக சிறப்பு சட்டத்தரணியாக கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த இந்த வழக்கை விரைவாக நடத்தி முடிக்க அரசுத் தரப்பு உறுதியாகவும், தீவிரமாகவும் உள்ளது. இதன் காரணமாகவே அனுபவம் வாய்ந்த சிறப்பு சட்டத்தரணி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.