வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 3030 ஏக்கர் வரையான காணிகளை அடுத்த வருடத்திற்குள் விடுவிப்பதற்கு எண்ணியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த காணிகளை இரண்டு கட்டங்களாக விடுவிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மேலும் கூறியுள்ளார்.
வடக்கில் பொது மக்களின் 21,659 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தின் வசமும், 7022 ஏக்கர் வரையான காணிகள் தனியார்த் துறையினரிடமும் உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 21519 ஏக்கர் காணிகள் அரச துறையிடமும், 504 ஏக்கர் காணிகள் தனியார் துறையினரிடமும் காணப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.