தாடி, மீசை வளர்ந்ததற்காக கின்னசில் இடம் பிடித்த இந்தியப்பெண்…

236

beard_woman_001-w245

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கின்னசில் இடம் பிடித்துள்ளார். ஹர்னாம் கவுர் என்ற அந்த பெண் பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்டோம் நோயால் தாக்கப்பட்டவர். இதனால் 24 வயதான இவருக்கு முகம், உடல் என ஆண்களைப்போலவே முடி முளைத்துள்ளது. 11 வயதிலிருந்தே முடி வளரத்தொடங்கியிருக்கிறது.

ஆரம்பத்தில் ஷேவிங் செய்து வந்த இவர் 16 வயதில் அதை நிறுத்திவிட்டு வளர்க்க தொடங்கிவிட்டார். சீக்கிய பெண்ணான இவர் அவர்கள் முறைப்படி தலைப்பாகை அணிந்து தாடி வளர்த்து ஆண்களைப்போலவே மாறிவிட்டார்.

தற்போது இவருக்கு இளம்வயதில் தாடி மீசை வளர்த்ததற்காக கின்னசில் இடம்பிடித்துள்ளார். இதற்காக கின்னசில் இடம்பிடித்தது சிறுமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

 

SHARE