“நீரின்றி அமையாது உலகு” என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் “அழகின்றி அமையாது திரையுலகு” என்று கூறலாம். பருவத்தில் தொடங்கி அறுவதை எட்டினாலும் கூட திரையில் தோன்றிட அழகு தேவைப்படுகிறது. இல்லையேல் இந்த மாயாஜால உலகம் அவர்களை காணாமல் போக செய்துவிடுகிறது என்பது தான் உண்மை.
அழகை மெருகேற்ற சிலை அழகுசாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர், சிலர் கேரள இயற்கை வைத்தியத்தை நாடுகின்றனர். ஆனால், நமக்கு பிடித்தமான நடிகர் திடீர் என்று பொலிவுடனும், மென்மையான சருமத்துடனும் திரையில் தோன்றும் போது நாம், “காசு இருந்தா காக்கா கூட கலராயிடும் மச்சி..” என்று உச்சுக்கொட்டிவிட்டு சென்றுவிடுவோம். அதற்கு அந்த “காக்கா” என்ன சிகிச்சை எடுத்துக் கொண்டது என்று நமக்கு தெரியாது.
அதுதான் பிளாஸ்டிக் சர்ஜரி (Plastic Surgery)! இந்த சிகிச்சைக்கு புகழ்பெற்ற உலக பிரபலம் யார் என்றால், அது மைக்கேல் ஜாக்சன் தான். தினமும் முகம் கழுவுவதைப் போல பல தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டவர் மைக்கேல் ஜாக்சன். நம் நாட்டு நடிகர், நடிகைகள் கூடவா இந்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்கின்றனர் என இப்போதே ஆச்சரியப்பட வேண்டாம். முதலில் இவர்கள் எல்லாமா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டவர்கள் என பாருங்கள்….
பிரியங்கா சோப்ரா
2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா அவரது மூக்கு பகுதியை சீரமைக்க ரைனோபிளாஸ்டி (Rhinoplasty) எனும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். மற்றும் ஸ்கின் லைட்னிங் (Skin Lightning) எனப்படும் சருமத்தை பொலிவுறச் செய்யும் சிகிச்சையையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி முகர்ஜி
நாற்பதை எட்டும் ராணி முகர்ஜி இன்றும் அழகை நச்சென்று வைத்திருப்பதற்கு காரணம், கோணலாக இருந்த அவரது மூக்கை நேராக்கிக் கொள்ள அவர் செய்துக் கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரி தானாம்.
ப்ரீத்தி ஜிந்தா
ப்ரீத்தி ஜிந்தா காஸ்மெட்டிக் சர்ஜரி எனும் சிகிச்சை செய்துள்ளார் மற்றும் சரும சுருக்கங்களை சரிசெய்ய சரும ஃபில்லர்கள் பயன்படுத்தியுள்ளார். இது தான் இந்த முதிர் கன்னியின் அழகு இரகசியமாம்.
சுஷ்மிதா சென்
நடிகை சுஷ்மிதா சென் வெளிப்படையாக, தான் சிலிகான் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். நல்ல பொண்ணுப்பா இந்த பிரபஞ்ச அழகி!!
ஆமிர்கான்
ஆமிர்கான் பிளாஸ்டிக் சர்ஜரியா? என்று வாய் பிளக்க வேண்டாம். இவர் நடித்த ஃப்பனா (Fanaa) படத்தில் இருந்த முக சுருக்கங்கள் 3 இடியட்ஸ் படத்தில் மறைந்து மாயமானதற்கு இந்த சிகிச்சை தான் காரணமாம்!
ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது மூக்கை சீரமைத்து கவர்ச்சியான லுக்கிற்கு மாறியது தற்போதைய இளைஞர்களுக்கு ஆச்சரியமாய் இருந்தாலும், 80களின் இளசுகளுக்கு தெரிந்த விஷயம் தான்.
கங்கனா ரனாவத்
பெரும்பாலான நடிகைகள் தங்களது மூக்கை தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். நடிகை கங்கனா ரனாவத்தும் தனது முகத்தை கவர்ச்சியாக அழகாக வைத்துக் கொள்ள மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.
ஹேமா மாலினி
இந்தியாவையே தனது அழகாய் கிறங்கடித்தவர் ஹேமா மாலினி. அறுவதில் கூட இன்னுமும் கவர்ச்சி குறையாத முக அழகு கொண்டிருக்கும் இவர் தனது முக சுருக்கங்களை அகற்ற, அவ்வப்போது ஃபில்லர் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறாராம்.
மல்லிகா
ஷெராவத் கவர்ச்சிக்கு பேர் போனா நாயகி மல்லிகா. ஜாக்கி சானையே தனது வலையில் விழ வைத்தவர். இவரது முன்னழகு, இடையழகு மேலழகு என அனைத்திற்கும் பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணம்!!!
ஷாருக்கான்
ஷாருக்கான் தனது சிகை அழகை சீரமைக்க இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அவரது உண்மையான முடிக்கு நாடு நடுவே சில செயற்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவரது பழைய மற்றும் தற்போதைய படங்களில் உள்ள ஹேர் ஸ்டைல் மாற்றத்தை கண்டாலே நீங்கள் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
– See more at: http://www.manithan.com/news/20160908121490#sthash.yrOZDUnf.dpuf