கர்ப்பிணியின் வயிற்றில் சுட்ட மர்ம நபர். பரிதாபமாக பலியான இரட்டை குழந்தைகள்.

240

625-167-560-350-160-300-053-800-300-160-90-1

அமெரிக்க நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதால் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகரான வாஷிங்டனில் லகீரா ரெனீ ஜான்சன் என்ற 21 வயது பெண் வசித்து வருகிறார்.

நிறைமாத கர்ப்பிணியான இவர் சில தினங்களுக்கு முன்னர் தலைநகரில் உள்ள வணிக வளாகத்திற்கு ஷொப்பிங் சென்றுள்ளார்.

உணவு பொட்டலங்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது அங்கு திடீரென இரண்டு மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்து பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் லகீராவின் வயிற்றில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. மேலும், மயக்கமடைந்த லகீராவை பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது, அதிர்ச்சியின் காரணமாக லகீராவிற்கு பிரசவம் ஆகியுள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக வயிற்றில் இருந்த இரண்டு பெண் குழந்தைகளையும் துப்பாக்கி குண்டுகள் தாக்கியதால் அவர்கள் இருவரும் இறந்த நிலையில் பிறந்துள்ளனர்.

தாயார் லகீரா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இச்சம்பவத்தில் வாலிபர் ஒருவருக்கும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூடு பற்றி பொலிசார் பேசியபோது, ‘லகீராவை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. பொதுவாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு லகீராவின் குழந்தைகள் பலியாகியுள்ளனர்’ என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE