3 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் 11 இளைஞர்கள் கைது

346

 

கம்பஹா வெலிவேறிய பிரதேசத்தில் 11 இளைஞர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வசம் காணப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 3 இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வெலிவேரிய மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த 20 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 09 பேர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக வெலிவேறிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE